Advertisment

'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

nn

Advertisment

பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீர மல்லு. திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் இப்பாடலுக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பை கொடுத்து வருகின்ற்னார்.

இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் இப்படலில் இடம் பெற்றிருக்கிறார். அத்துடன் அனசுயா பரத்வாஜ் மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோரும் நடனமாடியுள்ளது.ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரபல பாடகர்கள் மங்களி, ராகுல் சிப்லிகுஞ்ச், ரம்யா பிஹாரா, யாமினி கந்தசாலா, ஐரா உடுபி, மோகனபோகராஜு, வைஷ்ணவி கண்ணன், சுதீப் குமார் மற்றும் அருணா மேரி ஆகியோர் குரல்கள், சந்திரபோஸ், அப்பாஸ் டைர்வாலா, பி.ஏ. விஜய், வரதராஜ் சிக்கபள்ளாபுரா மற்றும் மங்கொம்பு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வரிகள் எழுதியுள்ளனர்.

ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்தினம் தயாரிக்கும் 'ஹரி ஹர வீர மல்லு' திரைப்படம் 2025 கோடை விடுமுறையில் மார்ச் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.

song
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe