ex minister jayakumar wishes vijay

Advertisment

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருக்கும் விஜய் தனது 49வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனையொட்டி அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் அவரது ரசிகர்கள் இலவச உணவு, ரத்ததானம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்து சினிமாவில் முன்னணி நடிகராய் சிறந்து விளங்கும் தம்பி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்" என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் ட்விட்டரில், "திரைப்பட நடிகர் சகோதரர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடிகர்கள் ஆர்யா, சூரி, ஹரிஷ் கல்யாண், அர்ஜுன் தாஸ், விக்ராந்த் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து லியோ படத்துக்கு காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களோடு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார்மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisment