ex admk minister jayakumar about maamannan

Advertisment

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ளது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அரசியல் அதிகாரத்தில் சம பங்களிப்பு பற்றி பேசியிருக்கும் இப்படம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகவும்இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் படங்கள் பார்ப்பதில்லை. இருப்பினும் என் நண்பர் ஒருத்தரை படம் பார்த்து சொல்லுமாறு சொன்னேன். அவரும் பார்த்துவிட்டு படம் சுத்த ஃபிளாப் என சொல்லிவிட்டார். இப்படத்தை திமுக ஆதரவாளர்கள் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புகழை அவர்களே பாடி வருகிறார்கள். பொதுமக்கள் யாரும் அப்படத்தை பார்ப்பதில்லை" என்றார்.