மன்மத லீலை படத்தை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் 'ஹாஸ்டல்'. அசோக் செல்வனுக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். சதீஷ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. வரும் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை ஜி.வி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கல்லூரி மாணவர்களின் ஹாஸ்டல் வாழ்க்கையை காமெடி கலந்த திகில் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது. 2015-ல் மலையாளத்தில் வெளியான 'அடி கப்யரே கூட்டமணி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.