Advertisment

ஈசிஆரில் நடந்த பரபரப்பு சம்பவம்; வீடியோ வெளியிட்ட நடிகை

ethir neechal serial actress madhumitha about ecr accident issue

Advertisment

தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும்எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 21 ஆம் தேதி அவரது ஆண் நண்பரின் காரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். பின்பு திரும்பி வந்தபோது காரை மதுமிதா ஓட்டி வந்தார். அப்போது ஒரு இடத்தில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால் சாலை மூடப்பட்டு இருந்தது.

அதனால் வாகனத்தை திருப்பி ஒன்வே ரூட்டில் ஓட்டி வந்தார். அதே சாலையில் காவலர் ரவிகுமார், இருசக்கர வாகனத்தில் காருக்கு எதிர்ப்புறமாக வந்தார். மதுமிதா ஓட்டி வந்த கார் ரவிகுமார் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரவிகுமாருக்கு வலது கால் தொடையிலும், இடது கை முட்டியிலும் காயம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரவிகுமாரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், மதுமிதா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துகாரை பறிமுதல் செய்தனர். பின்பு ஆர்டிஓ சோதனைக்குப் பின் காரை ஒப்படைத்தனர். அடுத்து சில மணி நேர விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய பிணையில் மதுமிதாவை விடுவித்தனர். இந்த சம்பவத்தின் போது மது போதையில் மதுமிதா காரை ஓட்டியுள்ளதாகக் கூறப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மதுமிதா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “எல்லா டிவி சேனல்கள், ஆர்டிகல், யூட்யூபில் ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. அதாவது, நான் மது அருந்துவிட்டு ஒரு போலீஸ்காரரை இடிச்சிருக்கேன்,அந்த போலீஸ்காரர் தீவிரமாக காயம்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கு. முதலில் அது உண்மை இல்லை. நான் குடிக்கவில்லை. ஆனால் சின்ன விபத்து நடந்தது. அதில் அந்த போலீஸ்காரர் இப்போ நல்லாத்தான் இருக்காங்க. நானும் நல்லாதான் இருக்கேன்” என்று விளக்கமளித்துள்ளார்.

madhumitha serial actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe