/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/et_2.jpg)
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில்நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம்தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் எனப்படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகிய நிலையில், தற்போது 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படமும்பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)