Advertisment

'எதற்கும் துணிந்தவன்' இரண்டாம்கட்ட படப்பிடிப்பு எங்கு? எப்போது?

Etharkkum Thunindhavan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'சூர்யா 40' எனத் தற்காலிகமாகப் பெயரிட்டு இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவந்தது.

Advertisment

தொடர்ச்சியாக 51 நாட்கள் நடந்துவந்த முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தின் வாயிலாக அறிவித்த பாண்டிராஜ், "தொடர்ச்சியாக 51 நாட்கள் நடந்துவந்த படப்பிடிப்பு ஷெட்டியூலை நிறைவுசெய்துள்ளோம். மழையாலும் வெயிலாலும் எங்கள் வேகத்தைத் தடுக்க முடியவில்லை. படக்குழுவினர் கடுமையாக உழைத்து நம்பமுடியாத உழைப்பைக் கொடுத்துள்ளனர். சூர்யா, சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி" என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்த நிலையில், 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இம்மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்போடு எதற்கும் துணிந்தவன் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

suriya40 actor suriya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe