/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/235_1.jpg)
சன் பிக்சர்ஸ்தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால்ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். சூர்யாவின் முந்தைய படங்களானசூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகிரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படமும்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தைபார்க்க வந்த சூர்யா ரசிகர்கள் "நிக்கட்டும், உக்ரைன் - ரஷ்யா போர்...மலரட்டும் மனிதம்", "ஜாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து வாழட்டும்மனிதம்... இது வருங்கால தலைமுறைக்கு நாம் செய்யும் புனிதம்" என்ற பல வாசகங்களடங்கிய துண்டு பிரசுரத்துடன்சமூக அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர்.நடிகர் சூர்யா மக்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போதுசூர்யாவை போன்றேஅவரது ரசிகர்களும்சமூக அக்கறையை வலியுறுத்தும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்கில் வெளியாகி பல்ரின் கவனத்தை பெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)