etharkkum thunindhavan movie teaser release date announced

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டீசர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது அதன்படி, " எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வரும் 18 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் தற்பொழுதில் இருந்தேசமூக வலைதளங்களில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யத்தொடங்கி விட்டனர்.

Advertisment