Advertisment

‘அப்படி பார்க்காதே என்று இரண்டு, மூன்று தடவை எச்சரித்தேன்’ - பிரபல ஹிந்தி நடிகை புகார்

பல நடிகைகள் ‘மீ டூ’ பாலியல் புகார் கூறி வருகிறார்கள். இந்த புகார்களில் பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சிக்கி உள்ளனர்.

Advertisment

esha gupta

இந்நிலையில், பிரபல ஹிந்தி நடிகையும் 2007ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவுமான இஷா குப்தா தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். “டெல்லியில் உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றேன். அப்போது ஒருவர் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். கண்களால் என்னை பலாத்காரம் செய்தார். அப்படி பார்க்காதே என்று இரண்டு, மூன்று தடவை எச்சரித்தும் அவர் பொருட்படுத்தவில்லை.

Advertisment

இதனால் என்னுடைய 2 பாதுகாவலர்கள் என்னை சுற்றி பாதுகாப்பாக நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தால் அந்த நபரின் மோசமான செயலை அறியமுடியும். அவரது பெயரை ரசிகர்கள் கண்டு பிடித்து சொல்லுங்கள்” என்று கூறினார்.

இஷா புகாரளித்த நபரை அவரது ரசிகர்கள் கண்டுபிடித்து சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டனர். ஓட்டல் உரிமையாளர் ரோஹித் விக் என்று ரசிகர்கள் கண்டுபிடித்தனர்.

Bollywood esha gupta
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe