/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/esha-gupta_0.jpg)
பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா பதிவிட்டுள்ள புகைப்படத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் உள்ள போதை பொருள் பழக்கங்கள் குறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் மற்றும் போதை மருந்து கடத்தல் தடுப்பு பிரிவினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் நடிகை ரியா சக்ரோபாரதி மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல கன்னட சினிமாதுறையிலும் போதை பொருள் பழக்கம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல நடிகையும் மாடலுமான இஷா குப்தா மது அருந்தும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் மதுவுடன் என்ன கலந்து குடிக்கலாம் என்பதை தெரிவித்துள்ளார். அவர் சொன்னதுபோல குடித்தால் மகிழ்ச்சி பொங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் இஷா குப்தா.
இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி யோகா ஆசிரியராகவும் இருக்கிறார். இதனால் பலரும் இஷா குப்தாவின் இந்த பதிவை எதிர்த்து கடுமையாக சாடி வருகின்றனர். உங்களை பின் தொடரும் இளைஞர்களுக்கு இதைதான் கற்று கொடுக்கிறீர்களா என்று பலரும் அவரிடம் கோபமாக கமெண்ட் செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)