Skip to main content

"ஒரு கிராம் தங்கம் பற்றிய கதை" - 'எறும்பு'  பட முன்னோட்டம் வெளியீடு

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

 Erumbhu Trailer Launch

 

இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ட்ரூ ஜி.வி.எஸ் புரொடக்‌ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார். 

 

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர், தயாரிப்பாளர் ரமணி ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 

ஒரு கிராம் மோதிரம் தொலைந்துவிட்டது. அப்பா, அம்மா வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இதனை தேடி கண்டுபிடிக்க அக்காவும், தம்பியும் முயல்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இவர்கள் என்ன முயற்சி எடுத்தார்கள். இதுதான் கதை. '' என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

விடுதலை 2 படம்; அப்டேட் வெளியீடு!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
viduthalai 2 update released

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது. இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று தந்தது. 

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. 1 வருடத்திற்கு முன்பாக வெளியான விடுதலை முதல் பாகத்தை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக ஆவலோடு காத்திருந்தனர். ஆனாலும், இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விடுதலை 2 படத்தின் அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் வருகிற ஜூலை 17ஆம் தேதி விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

Next Story

‘ல்வ் லிங்க்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
The shooting of 'Love Link' started with Pooja

எம்ஆர் பிக்சர்ஸ் ஏ மகேந்திரன் ஆதிகேசவன் வழங்கும், அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில் ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம்- காம் திரைப்படம் ‘லவ் இங்க்’. இப்படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் இன்று தொடங்கியது.

நடிகர் அஜித்குமாரின் ’வலிமை’, அதர்வா முரளியின் ’100’ மற்றும் பல படங்களில் ராஜ் அய்யப்பா நடித்திருக்கிறார். இவர், திரைப்படங்களில் மட்டுமல்லாது ஓடிடி தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘உப்பு புளி காரம்’ என்ற ஓடிடி தொடரில் இவரது கதாபாத்திரம் பிரபலமானது. ‘லவ் இங்க்’ படத்தில் நடிகை டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடிக்கிறார். டெல்னா, இதற்கு முன்பு டிவி சீரியல்களில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியுள்ளார். இதற்கு முன்பு, சில படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த இவர் சில அரசியல் பாடல்களை இயக்கியுள்ளார்.

இப்படம் குறித்து  இயக்குநர் மேகராஜ் தாஸ் கூறும்போது, “இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மகேந்திரன் ஆதிகேசவன் சாருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்த பிறகு மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான நடிப்பு அதே நேரத்தில், பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் மக்களை ஈர்க்கும் வசீகரம் கொண்ட ஒரு நடிகரைத் தேடினேன். ‘வலிமை’ படத்தில் ராஜ் அய்யப்பாவின் நடிப்பைப் பார்த்தபோது, இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமானவராக இருப்பார் என்று உணர்ந்தேன். 

டெல்னா டேவிஸ் தனது திறமையான நடிப்பு மற்றும் அழகால் பல ரசிகர்களைப் பெற்றவர். யோகி பாபு, திலீபன், விடிவி கணேஷ், முனிஷ்காந்த், அர்ஷத், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, மாறன், சுபாஷினி கண்ணன், கே.பி.ஒய்.வினோத், டி.எஸ்.ஜி ( ‘மார்க் ஆண்டனி’ வில்லன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்), மௌரிஷ் தாஸ், ப்ரீதா, வினோத் முன்னா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் உள்ளனர். அர்ஜூனா ஏ.எஸ் (ஒளிப்பதிவு), விஷ்ணு விஜய் (இசை), ராமு தங்கராஜ் (கலை இயக்குநர்), பி. கிருஷ்ணா சுதர்சன் (எடிட்டர்), மற்றும் சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்” என்றார்.