/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/348_3.jpg)
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா தமிழில் கடைசியாக 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தெலுங்கில் தற்போது 'சாகுந்தலம்', 'யசோதா' மற்றும் 'குஷி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் 'யசோதா' படம் தமிழ், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வருகிற 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமந்தா அடுத்ததாக துல்கர் சல்மான் படத்தில் மலையாள திரையுலகில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகும் 'கிங் ஆஃப் கோதா' படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகப் படக்குழு சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக துல்கர் சல்மானுடன் சமந்தா இணைந்து நடிக்கவுள்ளார். ஆனால் இதற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'மகாநதி' படத்தில் துல்கர் சல்மான் மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் இணைந்து ஒரு காட்சியிலும் அப்படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)