ADVERTISEMENT

எந்திரன் 3டி படமல்ல!!!

12:14 PM Nov 03, 2018 | kamalkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொதுவாக திரையரங்குகளில், சுற்றிலும் ஸ்பீக்கர்கள் இருக்கும். இன்னும் சில திரையரங்குகளில் மேலேயும் ஸ்பீக்கர்கள் இருக்கும். இவையெல்லாம் படம் பார்க்கும்போது நல்ல ஒலி அமைப்பை கொடுத்து, படம் பார்க்கும் அனுபவத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும்.


எந்திரன் 2.0 திரைப்படம் இதுநாள்வரை இருந்த ஒலி அமைப்புகளை தாண்டி SRL 4d டெக்னாலஜியில் இன்னும் ஒரு படி மேலே போய், உலகத்தரம் வாய்ந்த ஒலி அமைப்போடு படம் உருவாக்கப்பட்டுள்ளது. 3டி காட்சிகள், 4டி ஒலி இவற்றை சேர்த்து படம் பார்க்கும்போது, அந்த அனுபவம் மேலானதாகவே இருக்கும்.

தலைக்கு மேலேயும், இடது, வலது பக்கங்களிலும் முக்கியமாக காலுக்கு கீழேயும் ஸ்பீக்கர்களை வைத்து பிரமிக்கச் செய்யும் டெக்னாலஜிதான் இந்த SRL 4d. திரையில் ஒரு கேரக்டர் ஊர்ந்து செல்லும் சத்தம் முன்பெல்லாம் இடது, வலது பக்கங்களில் மட்டுமே கேட்கும். ஆனால் இந்த 4 டி தொழில்நுட்பத்தில் ஊர்ந்து செல்லும் (தரையில் ஏற்படும் சத்தங்கள்) சத்தம் அனைத்தும் காலுக்கு அடியில் இருக்கும் ஸ்பீக்கர்கள் மூலம் கேட்கும். இதனால் காலுக்கு அடியிலேயே யாரோ ஊர்வது போன்ற அனுபவம் நமக்கு ஏற்படும். இது ஒரு எடுத்துக்காட்டுதான்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT