Advertisment

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு... ரசிகர்கள் அதிர்ச்சி...

கடந்த 2016ஆம் ஆண்டே கவுதம் மேனன் தனுஷ வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்றொரு படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார். விரைவில் படம் வெளியாகிவிடும் என்று பார்த்தால், அப்படியே இந்த படத்தை பாதியிலேயே விட்டுவிட்டு துருவ நட்சத்திரம் படத்தை எடுக்க தொடங்கினார் கவுதம். இதன் மீண்டும் 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் இப்படத்திலிருந்து மருவார்த்தை பேசாதே என்றொரு பாடலை வெளியிடப்பட்டது. இந்த பாடலின் இசையமைப்பாளர் என்று தெரியாமலேயே வெளியிடப்பட்டது. இது ஒரு மிகப்பெரிய புரோமோஷனாக இருந்தது.

Advertisment

dhanush

2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதுவரை ஷூட்டிங்கும் நீடித்துக்கொண்டே இருக்க, படத்திற்கு வேறு பல தடைகள் வர தொடங்கின. தீபாவளிக்கும் ரிலீஸாகாமல் இருந்த படம், 2019ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. இதுபோல ரிலீஸ் தேதிகள் மட்டும் அறிவிக்கப்பட்டு படம் வெளியாகமலேயே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

Advertisment

அண்மையில் தணிக்கை குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சனை காரணமாக இப்படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இப்படம் வருகிற 26ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்து, தற்போது மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அடுத்த வாரத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

DHANUSH mega akash
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe