ennio morcone

ஹாலிவுட்டின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான எனியோ மொரிகோனே தனது 91 வயதில் காலமானார். இத்தாலி நாட்டைச் சேர்ந்த எனியோ இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் இசையமைத்துள்ளார்.

Advertisment

மோரிகோனே தனது இல்லத்தில் கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டார். இதன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு ரோம் மருத்துவமனையில் காலமானார்.

Advertisment

இதனை அவருடைய வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். எனியோ இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பல சர்வதேச உயரிய விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறார். சர்வதேச சினிமாவில் ஐம்பது வருடங்களைக் கடந்த வாழ்நாள் சாதனையாளர் எனியோ.

எனியோவின் ரசிகர்களும், பிரபலங்களும் அவரது மறைவிற்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment