Advertisment

சர்ச்சையில் சிக்கிய அஷ்வினின் பேச்சு... ரிலீஸில் தள்ளிப்போகும் 'என்ன சொல்ல போகிறாய்' 

enna solla pogirai movie release date postponed

குக் வித்கோமாளி நிகழ்ச்சி மூலம்பிரபலமான அஷ்வின், இயக்குநர் ஹரிஹரன் இயக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.படத்தின் பணிகளை முடித்துள்ள படக்குழு, டிசம்பர் 24ஆம் தேதி திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது.

Advertisment

சமீபத்தில் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய அஷ்வின், "நான் கதை கேட்கும்போது நல்லாயில்லனா தூங்கிவிடுவேன். 40 கதைக்கும் மேல் நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை 'என்ன சொல்ல போகிறாய்'தான்” எனத் கூறியிருந்தார். இவரின்இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில்சர்ச்சையைக் கிளப்பியதோடு, விவாதத்திற்கும் உள்ளானது.

Advertisment

இந்நிலையில், படத்தின்ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தவிர்க்க முடியாத சில காரணத்தினால் ‘என்ன சொல்ல போகிறாய்’படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், விரைவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

enna solla pogirai Ashwin kumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe