enforcement directorate raid in produver ravinder house

Advertisment

'முருங்கைக்காய் சிப்ஸ்', 'சுட்ட கதை', 'நட்புனா என்னனு தெரியுமா' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். அதோடு சில படங்களை விநியோகமும் செய்திருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ஒன்றான யூ-ட்யூப்பில் பல சேனல்களில் நேர்காணல் மூலம் தன் கருத்துக்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2022-ம் ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தார்.

இதற்கு முன்பாக 2020ஆம் ஆண்டு கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதாக கூறி பணமோசடியில் ஈடுப்பட்டதாக புகார்கள் எழுந்தது. சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர், தன்னிடம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின்கிழ் ரூ.16 கோடி வாங்கி விட்டு ஏமாற்றிவிட்டதாக ரவீந்தர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸ், ரவீந்தர் ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டு அவரைக் கைது செய்தது. பின்பு ஒரு மாதம் சிறையில் இருந்த அவருக்கு பின்னர் நிபந்தனை ஜாமின் கிடைத்தது.

enforcement directorate raid in produver ravinder house

Advertisment

இந்த வழக்கு தொடர்பாக ரவீந்தரின் வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் தற்போது சென்னை அசோக் நகரில் உள்ள அவரது குடியிருப்பில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.