Advertisment

லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!

Enforcement department raids in Lyca productions

Advertisment

பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லைகா நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

எந்த புகாரின் பேரில் இந்த சோதனையானது நடத்தப்படுகிறது என இன்னும் தெரியாத நிலையில் சோதனையின் முடிவில் அமலாக்கத்துறையினர் சமர்ப்பிக்கும் அறிக்கையினை பொறுத்து எதற்காக சோதனை நடத்தப்பட்டது, என்னென்ன ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்ற விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enforcement Department lyca
இதையும் படியுங்கள்
Subscribe