Skip to main content

'ஆர்யா - விஷால்' படத்தின் டீசர் எப்போது..?

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

cssa

 

‘அரிமா நம்பி’ படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து 'எனிமி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார். நடிகர் ஆர்யா வில்லனாக நடித்து வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஐதராபாத்தில் நடந்த இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துபாயில் 30 நாட்கள் நடைபெற்றது. 

 

அங்கு, அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஒருமாதமாக துபாயில் நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சமீபத்தில் முடிவடைந்தது. மேலும், இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ள நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீடு குறித்து இப்படத் தயாரிப்பாளர் வினோத் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "எனிமி’ அப்டேட் கேட்பவர்களுக்கு, படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சென்னையில் மீதமுள்ள 10% காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவுள்ளது. விரைவில் அதையும் முடித்துவிட்டு. அடுத்த இரண்டு வாரத்தில் படத்தின் டீஸரை வெளியிடவுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எல்லா கிராமங்களுக்கும் சென்று பாருங்க” - விஷால் ஆதங்கம் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
vishal about his political entry in 2026 election

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில்  ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த விஷால், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது 2026 தேர்தலில் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “வருகிற 26 உலகெங்கும் உள்ள திரையரங்கில் காணப்படுவேன். 2026 தேர்தலில் காணப்படுவேன். ஆனால் 2026-ல் என்னை வரவிடாதீங்க. நீங்க நல்லது பண்ணிட்டா நாங்க நடிச்சிட்டு எங்க வேலையை பார்ப்போம். ஏன் எல்லாருக்கும் வழி கொடுக்கிறீங்க. நீங்க நல்லது செஞ்சிருந்தால் நாங்க ஏன் எங்க தொழில விட்டுவிட்டு உங்க தொழிலுக்கு வரப்போறோம்.     
  
எல்லா கிராமங்களுக்கும் சென்று பாருங்க. அதை பார்த்தாலே இத்தனை பேர் இருக்கும் போது, எதுக்கு இன்னொரு கட்சி, இன்னொரு தலைவன் வரவேண்டும் என யோசிக்க வைக்கும். இதை ஒரு வாக்காளராக, சமூக சேவகரா ஆதங்கத்தோடு சொல்கிறேன். தி.மு.க, அ.தி.மு.க என குறிப்பிட்டு இதை சொல்லவில்லை. எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒரே விஷயம் மக்களுடைய அடிப்படை வசதிகள். கார், வீடு, வெளிநாட்டு படிப்பு என மக்கள் கேட்கவில்லை. இதில் என்ன கொடுமை என்றால், மக்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனை, அவர்களுக்கு தனியார் மருத்துவமனை. வரி கட்டுவது மக்கள். அந்த வரி பணத்தில் அவர்கள் மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்வார்களா?. இது போல நிறைய விஷயங்கள் இருக்கு. அந்த விஷயங்களையெல்லாம் பூர்த்தி செய்தால், வெறும் வாக்களித்து விட்டு என்னுடைய வேலையை செய்து வருவேன். மாற்றம் கண்டிப்பாக தேவைப்படுகிறது” என்றார்.

Next Story

“என்னிடம் காசில்லை” - விமர்சனங்களுக்கு விஷால் விளக்கம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
vishal about his election cycle issue

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில்  ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அவரிடம் ஒரு மாணவன், கடந்த தேர்தலில் விஜய்யை போலவே சைக்கிளில் வந்து வாக்களித்தது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “வெற்றி என்பது ஒரு நடிகருக்கு சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கு ஒரு நடிகர் எவ்வளவு போராட வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் விஜய்க்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. ஒரு பேட்டியில் அவரை பற்றி ரொம்ப கேவலமாக எழுதியிருந்தனர். அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவருடைய தன்னம்பிக்கை மூலம் எல்லார் முன்னாடியும் தளபதியாக இன்று நிற்கிறார். அந்த தன்னம்பிக்கை எனக்கு உந்துதலாக இருக்கிறது. அவருடைய வளர்ச்சியை பார்த்து வளர்ந்த நடிகன் நான்” என்றார். 

vishal about his election cycle issue

மேலும், “சைக்கிளில் போனது அவரை பார்த்து இல்லை. ஆனால் அவர் போனதை பார்த்திருக்கிறேன். அவர் மாதிரி போக வேண்டும் என்ற யோசனை கிடையாது. என்னிடம் வண்டி இல்லை. அப்பா, அம்மாவிற்கு ஒரு வண்டி இருக்கிறது. மீதி வண்டியெல்லாம் விற்றுவிட்டேன். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனில் சஸ்பென்சன்லாம் மாத்த முடியாது. என்னிடம் காசில்லை. அதனால் சைக்கிள் வாங்கினால், ட்ராஃபிக் இல்லாமல் ஈஸியாக சென்றுவிடலாம்” என்றார்.