Skip to main content

‘எனிமி’ பட அப்டேட் கொடுத்த விஷால்!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

vishal

 

‘அரிமா நம்பி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து 'எனிமி' திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவியும், வில்லனாக ஆர்யாவும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

 

சென்னை, ஐதராபாத், துபாய் உள்ளிட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, தற்போது நிறைவுபெற்றுள்ளது. இத்தகவலை நடிகர் விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. மிக அற்புதமான இந்தக் குழுவினருடன் பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. ‘எனிமி’ படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்