
'அரிமா நம்பி' படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து 'எனிமி' திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்க, ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். 'புட்ட பொம்மா' புகழ் தமன் இசையமைக்கிறார். ஐதராபாத்தில் முதற்கட்டபடப்பிடிப்பை நடத்திய படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பைத்துபாயில் நடத்தி மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தது.
இதையடுத்து, படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்திவரும் நிலையில் சமீபத்தில் வெளியான 'எனிமி' படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இன்று (03.09.2021) மாலை இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 'டம் டம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)