/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/enemy_1.jpg)
தமிழ் சினிமாவில் 'அரிமா நம்பி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆனந்த் சங்கர், 'இருமுகன்', 'நோட்டா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஷாலை வைத்து 'எனிமி' படத்தை இயக்கியிருந்தார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் ஆர்யா வில்லனாக நடித்திருந்தார். தீபாவளி தினத்தை முன்னிட்டு 'எனிமி' திரைப்படம் திரையரங்கில் வெளியானது. 'எனிமி' படத்தைப் போலவே இயக்குநர் சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருந்த 'அண்ணாத்த' படமும் தீபாவளி தினத்தன்று வெளியான. இவ்விருபடங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில், சேலத்தில் உள்ள ஒரு திரையரங்கில் முதலில் 'எனிமி' படத்தின் இரண்டாம் பாதி திரையிடப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் காட்சி வந்த பிறகுதான் படத்தின் இரண்டாம் பாதி என்று தெரியவந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், படத்தின் முதல் பாதியைக் காண வேண்டும் என கத்திக் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து காவல்துறையினரை வரவழைத்து ரசிகர்களை சமாதானம் செய்துள்ளனர்.
இந்நிகழ்வை படம் பிடித்த ரசிகர் ஒருவர், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் "என்னடா வடிவேல்பட காமெடி போல ரீல் பொட்டிய மாத்தி போட்டிட்டீங்க" என்று சமூக வலைதளங்களில்கலாய்த்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)