fsafvasvas

‘அரிமா நம்பி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து 'எனிமி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார். நடிகர் ஆர்யா வில்லனாக நடித்து வரும் இப்படத்திற்குதமன் இசையமைக்கிறார்.

Advertisment

bdsbds

ஐதராபாத்தில் நடந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துபாயில் 30 நாட்கள் நடைபெற்றது. அங்கு அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் ஒருமாதமாக துபாயில் நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. மேலும் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது.

Advertisment