/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/20-is-a-product-of-hollywood-standard-rajinikanth_b_2111161258.jpg)
'காலா' படத்தையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கிறார். கடந்த சனிக்கிழமை டார்ஜிலிங்கில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு அங்கேயே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் இந்தாண்டுக்குள் வெளிவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போக உள்ளதாக புதிய தகவல் கசிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் கடந்த ஆண்டே முடிந்துவிட்ட நிலையில் கிராபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது. மேலும் இதன் காரணமாக ரசிகர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்பதற்காக 2.0 படத்திற்கு பதில் 'காலா' படத்தை முன்கூட்டியே வெளியிட்டது படக்குழு. இந்த படமும் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இந்த புதிய தகவலால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)