/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Di30-ewU4AAOHTm.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தனுஷ் - கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கும் இப்படத்தில் நடிகர் ராணா டகுபதி, சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் தற்போது நடிகர் சசிகுமாரும் தனுஷுடன் சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடிக்க இணைந்துள்ளார். தர்புகா சிவா இசையில் மறு வார்த்தை பேசாதே, நான் பிழைப்பேனோ, விசிறி ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தில் இருந்து 'விசிறி' பாடலின் இன்னொரு வடிவம் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. கௌதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)