Advertisment

'சின்னமச்சான்' பாடலை தொடர்ந்து செந்தில்கணேஷ் - ராஜலக்ஷ்மி பாடிய அடுத்த பாடல் 

en kadhali seen podra

சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரித்து, அங்காடிதெரு மகேஷ், ஷாலு இணைந்து நடித்த படம் 'என் காதலி சீன் போடுறா'. 23 நாட்களில் படமான இப்படத்தில் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா, அம்பானிசங்கர், தியா, தென்னவன், வையாபுரி, விஜய் டிவி.கோகுல், நிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கிய ராம்சேவா இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படம் குறித்து அவர் பேசும்போது....

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

"ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும். சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லா விட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது. இதை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறோம். மனோபாலா காமெடியில் கலக்கி இருக்கிறார். நான்கு பாடல்களும் வெவ்வேறு விதமாக கொடுத்திருக்கிறார் இசைமைப்பாளர் அம்ரிஷ். சின்னமச்சான் பாடலை தொடர்ந்து செந்தில்கணேஷ் - ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள். 'நிலா கல்லுல செதுக்கிய சிலையா' என்று துவங்கும் அந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. வெறும் 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம். அதற்கு பக்க பலமாக இருந்த என்னுடைய ஒளிப்பதிவாளர் வெங்கட் மற்றும் படக்குழு அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது" என்றார்.

senthilganesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe