Advertisment

இளையராஜாவுக்கு உரிமை இல்லை - டெல்லி உயநீதி மன்றம் உத்தரவு

en iniya pon nilave song ilaiyaraaja issue

1980ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான ‘மூடுபனி’ படத்தில் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் ரசிக்கப் பட்டு வருகிறது. இந்தப் பாடலை இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா, ஜீவா நடிப்பில் பா.விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘அகத்தியா’ படத்தில் மறு உருவாக்கம் செய்துள்ளார். இப்பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Advertisment

இதையடுத்து மூடுபனி படத்தின் பாடல்களின் காப்புரிமை சரிகமா இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருக்கும் நிலையில் அந்நிறுவனம் அகத்தியா படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் மீது டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த மனுவில் “எங்களிடம் உரிய அனுமதியை பெறாமல் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் அகத்தியா திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்பாடல் குறித்தான அறிவிப்பு வெளியானப் போதிலும் நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். அதையும் மீறி அப்பாடலை வெவ்வேறு தளங்களில் வெளியிட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

இதையடுத்து வேல்ஸ் நிறுவனம், இளையராஜாவிடம் காப்புரிமை பெற்றுதான் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை மறு உருவாக்கம் செய்தோம் என கூறியிருந்தது. இந்த நிலையில் அப்பாடலின் காப்புரிமை சரிகமா இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருக்கிறது என்றும் அதனால் இளையராஜா அந்த பாடலை மூன்றாம் தரப்பினருக்கு ஒதுக்க முடியாது என்றும் டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அப்பாடலை வெளியிடவும் தடை விதித்துள்ளது.

delhi high court yuvan shankar raja Ilaiyaraaja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe