Skip to main content

ஆஸ்கர் பிரபலத்திற்கு நேர்ந்த அவல நிலை - படக்குழு விளக்கம்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

The Elephant Whisperers bomman bellie issue

 

கார்த்திகி கோன்சால்வேஸ் இயக்கத்தில் குனீத் மோங்கா தயாரித்திருந்த ஆவணக் குறும்படம் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பராமரிப்பு பணியாளர்களாக பணியாற்றி வருகின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி, தாயைப் பிரிந்து உடம்பில் காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானையை ரகு எனப் பெயரிட்டு வளர்த்து வந்ததை குறித்து இப்படம் எடுக்கப்பட்டது. இப்படம் 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவணக் குறும்படப் பிரிவில் விருது வாங்கிய நிலையில், அதன் மூலம் உலகளவில் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி பலரின் கவனத்தை ஈர்த்தனர். 

 

இந்நிலையில் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி, இயக்குநர் கார்த்திகி கோன்சால்வேஸ் மீது பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த தம்பதி சார்பில், இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், படத்தின் வருமானப்படி முறையான வீடு, வாகனம் மற்றும் போதிய நிதியுதவி ஆகியவற்றை அவர்கள் நேரம் செலவிட்டு நடித்ததற்காக தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களை உண்மையான ஹீரோக்கள் எனக் கூறி பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரையும் பார்க்க வைத்து விளம்பரப்படுத்திவிட்டனர். ஆனால் படக்குழு, தமிழக முதல்வரின் பரிசுத் தொகையையும் பிரதமர் மோடியின் பரிசுத் தொகையையும் வாங்கிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இது பரபரப்பைக் கிளப்ப, தற்போது படக்குழு தயாரிப்பு சார்பில் தம்பதியின் குற்றச்சாட்டை மறுக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இப்படத்தின் நோக்கம் யானைப் பாதுகாப்பு, வனத்துறையின் முயற்சிகள் மற்றும் அதற்கு பணியாற்றுகின்ற பொம்மன் மற்றும் பெல்லி ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதாகும். இப்படம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் யானை வளர்ப்பவர்களை பற்றிய உண்மையான தாக்கத்தை உருவாக்கியுள்ளது. 

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகளை பராமரிக்கும் 91 யானைகள் மற்றும் பணியாளர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீடுகள் கட்டவும், யானைகள் முகாமை மேம்படுத்தவும் நன்கொடை அளித்துள்ளார். இந்த ஆவணப்படம் இந்தியா முழுவதும் உள்ள மாநிலத் தலைவர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் அகாடமி விருது என்பது பொம்மன் மற்றும் பெள்ளி போன்ற பணியாளர்களுக்குப் பரவலான அங்கீகாரத்தைக் கொண்டு வந்த தேசிய பெருமையின் தருணமாகும். 

 

படம் மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டு அனைத்தும் பொய்யானவை. இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவர் மீதும் எங்களுக்கு ஆழ்ந்த மரியாதை உள்ளது. மேலும் நல்ல மாற்றத்தை உருவாக்க விரும்புகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாட்டு நாட்டு பாடல்  என்னுடைய சிறந்த படைப்பு இல்லை” - எம்.எம்.கீரவாணி 

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
MM Keeravani spoke about oscar winning song

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் ‘நாட்டு நாட்டு’ பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

இந்த நிலையில், ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் தன்னுடைய சிறந்த படைப்பு கிடையாது என்று இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “பாகுபலி 1 மற்றும் 2ஆம் பாகங்களில் வரும் இசையை ஒப்பிடும் போது, ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் என்னுடைய சிறந்த படைப்பு கிடையாது. தாமதமாகவோ, முன்னதாகவோ ஒரு பாடலுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால், இது என்னுடைய சிறந்த படைப்பு அல்ல. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். ஆனால், அங்கீகாரம் வரவேண்டும் என்றபோது, ​​அது ஏதோ ஒரு வகையில் எங்கிருந்தாவது வரும்” என்று கூறினார்.

முன்னதாக ஆஸ்கர் விருது வென்ற போது எம்.எம்.கீரவாணி கூறியதாவது, “நான் தச்சர்களின் சத்தத்தை கேட்டு வளர்ந்தேன். இப்போது நான் ஆஸ்கார் விருதுகளுடன் இருக்கிறேன். என் மனதில் ஒரே ஒரு ஆசை இருந்தது. ஆர்.ஆர்.ஆர் படம் வெற்றி பெற வேண்டும், ஒவ்வொரு இந்தியனின் பெருமையும், என்னை உலகின் உச்சியில் வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

இந்தியத் திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் குழு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Oscar team invited Indian film celebrities!

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 96ஆவது ஆஸ்கர் விருது விழா கடந்த மார்ச் 10ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. 

அதே சமயம், ஆஸ்கர் விருதுக் குழுவில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைத்துறை கலைஞர்கள், பிரபலங்கள் அழைக்கப்படுவார்கள். அதில், தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் ஆஸ்கர் குழுவின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் சேர உலகம் முழுவதும் உள்ள 487 திரைக்கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதில், இந்திர திரைப் பிரபலங்களான இயக்குநர் ராஜமெளலி, அவரது மனைவியும் ஆடை வடிவமைப்பாளரான ரமா ராஜமெளலி, நடிகை ஷபானா ஆஸ்மி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இயக்குநர் ரீமா தாஸ் மற்றும் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற நடன இயக்குநர் பிரேம் ரஷித் உள்ளிட்டோருக்கு உறுப்பினர்களாக சேர ஆஸ்கர் குழு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

2024ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது குழுவின் உறுப்பினர் பட்டியலில் இடம்பெறும் இந்திய திரைப் பிரபலங்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்கர் விருது குழுவில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சூர்யா ஆகியோர் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.