“யுவன் பயோ-பிக்” - ரகசியம் உடைத்த இளன்!

elan talk about yuvan bio pic

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் தயாரிப்பில், இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'ஸ்டார்'. இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இப்படம் வருகிற மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனால் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நக்கீரன் ஸ்டூடியோஸ், யூடியூபிற்கு படத்தின் இயக்குநர் இளன், கதாநாயகிகள் அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் பேட்டி அளித்துள்ளனர். அப்போது படம் பற்றிய பல்வேறு அனுபவங்களை அவர்கள் பகிர்ந்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியில், இயக்குநர் இளன் யுவன் ஷங்கர் ராஜா பயோ பிக் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “யுவனுடைய பயோ-பிக் எடுத்தால் அதை நான் தான் இயக்குவேன் என அவரிடமே சொல்லிவிட்டேன். அதற்கு பேச்சுவார்த்தை அடிப்படையில் ஒப்பந்தமும் போட்டுள்ளேன். அதோடு ஒரு சீனையும் அவருக்குச் சொன்னேன். அவரும் செம்மையா இருப்பதாகச் சொன்னார். அந்த படம் யுவனுடைய பாதிப்புகள், அவருடைய ஏற்ற இறக்கங்கள் என அனைத்தும் இருக்கும்படியான படமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்.

Director Elan yuvan shankar raja
இதையும் படியுங்கள்
Subscribe