sama

எகிப்து நாட்டைச் சேர்ந்த பெல்லி நடன கலைஞர் சமா எல் மஸ்ரி, ஓழுக்கக்கேட்டிற்குத் தூண்டுதல் என்ற வழக்கில் மூன்று வருடங்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 20,000 டாலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சமா எல் மஸ்ரி, தனது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாகவும், மிகவும் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டு பலரை தூண்டுவதாகவும் கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எகிப்து நீதிமன்றம் அவரை மூன்று ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனை வழங்கி, பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளது. அவருடைய ரசிகர்கள் பலரும் இதற்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment