சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, திரு ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைத்துள்ளார். நடிகர் சிம்பு கொடுத்த ஒத்துழைப்பால் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டத்தில் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன். சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படம் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், சிறு முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி பன்ச் வசனங்கள் நிறைந்த இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/LDfuP0YeIQk.jpg?itok=grWL8Nxk","video_url":" Video (Responsive, autoplaying)."]}