simbu

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிம்பு நடிப்பில் தயாராகி வரும் 'ஈஸ்வரன்' படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.

Advertisment

கரோனா நெருக்கடியால் அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் காரணமாக சிம்பு நடித்து வந்த, 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அந்தஇடைப்பட்ட காலத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்ட படம் 'ஈஸ்வரன்'. இப்படமானது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் முழு வீச்சுடன் தயாராகி வருகிறது. திண்டுக்கல்லில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, 40 நாட்களில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.

Advertisment

தீபாவளி நாளான நாளை, அதிகாலை 4.32 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் டீசர் வெளியாகும் என்று நடிகர் சிம்பு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மிகக்குறைவான நாட்களில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இப்படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பில் இருந்த சிம்பு ரசிகர்களுக்கு, டீசர் குறித்தான திடீர் அப்டேட் புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.