Advertisment

ஈஸ்வரன் படத் தணிக்கை... உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்!

simbu

Advertisment

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, திரு ஒளிப்பதிவு செய்ய, தமன்இசையமைத்துள்ளார்.

நடிகர் சிம்பு கொடுத்த ஒத்துழைப்பால் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டத்தில் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன். மேலும், சிம்புவின் சினிமா வாழ்க்கையில் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தின் இசை ஜனவரி 2-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் தணிக்கை மற்றும் ரிலீஸ் தொடர்பான தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இப்படம், ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. இதை அறிந்து உற்சாகமான சிம்பு ரசிகர்கள், தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

directorsuseenthiran Simbu
இதையும் படியுங்கள்
Subscribe