maniyarfamily

varu

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

நெஞ்சில் துணிவிருந்தால், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், கோலிசோடா 2 போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் சத்யமூர்த்தி தற்போது "எச்சரிக்கை' இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து பாராட்டியதுடன் சேர்த்து படத்தையும் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார். டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை பிரபல லஷ்மி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிரத்னம், AR.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் இப்படம் குறித்து பேசும்போது.... "இது கிரைம் திரில்லர் படம். 'எச்சரிக்கை' இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார். 'கிட்நாப்' பற்றி இதில் சொல்லி இருக்கிறோம். பாண்டிச்சேரி சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படத்தை பார்த்த கிளாப் போர்டு சத்யமூர்த்தி பாராட்டியதோடு மட்டுமல்லாமல் படத்தின் மொத்த உரிமையையும் வாங்கி ரிலீஸ் செய்கிறார். இம்மாதம் 24ஆம் தேதி படம் வெளியாகிறது" என்றார். மா, லஷ்மி குறும் படங்களின் நேர்த்தியை கேள்விப்பட்ட அறம், குலேபகாவலி படங்களின் தயாரிப்பாளர் ராஜேஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சார்ஜுன் சொன்ன வித்தியாசமான கதையை கேட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் தற்போது யூ டியூப் புகழ் இளைஞர்களை வைத்து 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்ற படத்தையும் தயாரித்து முடிற்றிருக்கிறது. மேலும் இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க இருக்கிறது. மேலும் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/SZeh7M4fs_Y.jpg?itok=1CzmDHb_","video_url":" Video (Responsive, autoplaying)."]}

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">