Advertisment

ராக் அமெரிக்க அதிபராக விருப்பம் தெரிவித்த அமெரிக்கர்கள்!

Dwayne Johnson

Advertisment

தொழில்முறை குத்துச்சண்டை வீரரும் நடிகருமான ராக், தற்போது ஹாலிவுட் திரையுலகில் முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக வலம்வருகிறார். சமீபத்தில், அமெரிக்காவில் நடந்த மக்கள் கருத்துவாக்கெடுப்பில் 46 சதவிகித அமெரிக்கர்கள் ராக் என அழைக்கப்படும் ட்வைன் ஜான்சன் அமெரிக்கா அதிபராக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ராக், "நான் என்னுடைய நாட்டை உளமார நேசிக்கிறேன். இங்கு எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கு என்றும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். நான் அரசியல்வாதியும் அல்ல; அரசியல் ஆர்வம் கொண்டவனும் அல்ல. அதே நேரத்தில், 46 சதவிகித அமெரிக்கர்கள் நான் அதிபராக வேண்டும் என விருப்பம் தெரிவித்திருப்பது, என்னை பணிவுடன் எழுந்து நிற்கவும், கற்றுக்கொள்ளவும் கவனிக்கவும் வைக்கிறது" எனக் கூறினார்.

the rock
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe