Skip to main content

ராக் அமெரிக்க அதிபராக விருப்பம் தெரிவித்த அமெரிக்கர்கள்!

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

Dwayne Johnson

 

தொழில்முறை குத்துச்சண்டை வீரரும் நடிகருமான ராக், தற்போது ஹாலிவுட் திரையுலகில் முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக வலம்வருகிறார். சமீபத்தில், அமெரிக்காவில் நடந்த மக்கள் கருத்து வாக்கெடுப்பில் 46 சதவிகித அமெரிக்கர்கள் ராக் என அழைக்கப்படும் ட்வைன் ஜான்சன் அமெரிக்கா அதிபராக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ராக், "நான் என்னுடைய நாட்டை உளமார நேசிக்கிறேன். இங்கு எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கு என்றும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். நான் அரசியல்வாதியும் அல்ல; அரசியல் ஆர்வம் கொண்டவனும் அல்ல. அதே நேரத்தில், 46 சதவிகித அமெரிக்கர்கள் நான் அதிபராக வேண்டும் என விருப்பம் தெரிவித்திருப்பது, என்னை பணிவுடன் எழுந்து நிற்கவும், கற்றுக்கொள்ளவும் கவனிக்கவும் வைக்கிறது" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'யாருடா அது தூங்கும்போது பென்சிலில் மீசை வரைஞ்சது'- ராக் ஷாக்!

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

'Someone drew a pencil mustache while it was sleeping' - Rock Shock

 

எல்லாமே சமுகவலைத்தளம் என ஆகிவிட்ட நிலையில் அதில் உலாவும் வீடியோக்கள் சொல்லவே தேவையில்லை. அதுவும் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் என அனுதினமும் வீடியோக்கள் வெளியாவதோடு வைரலும் ஆகிறது. இதில் பிரபலங்களின்  வீடியோக்களும் அடக்கம்.

 

இந்நிலையில் ரெஸ்லிங் வீரரும், நடிகருமான ராக் தூங்கிக் கொண்டிருக்கும் போது முகத்தில் குழந்தைகள் மீசை வரைந்து குறும்பு செய்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார். ராக் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவரது குழந்தைகள் அவரது முகத்தில் பென்சிலை கொண்டு தாடி, மீசை வரைந்து விட்டனர். உறக்கத்திற்கு பிறகு எழுந்த ராக் முகத்தை கண்ணாடியில் பார்க்க, முகத்தில் வரைந்திருந்த மீசை வரைந்திருந்தது தெரியவந்தது. தற்பொழுது இந்த  வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

Next Story

ரூ. 640 கோடி சம்பளம் வாங்கியுள்ள ராக்...  அதிக சம்பளம் பெற்ற 10 பேரில் ரஜினி பட நடிகர்...

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை வருடா வருடம் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் முதல் அந்த ஆண்டு ஜூலை வரையில் எந்த நடிகர் அதிக சம்பளம் பெற்றிருக்கிறார் என்ற லிஸ்டை வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் அக்‌ஷய்குமார்தான் அதுவும் ஜாக்கி சானை பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

rock

 

 

wwe புகழ் ‘தி ராக்’ எனப்படும் ட்வெய்ன் ஜான்சன்- ரூ. 640 கோடி, தோர் கதாபாத்திரத்தில் நடித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் - ரூ. 547 கோடி, அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் - ரூ. 473 கோடி, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் - ரூ. 466 கோடி,  ஜாக்கி சான் - ரூ. 415 கோடி, ஹேங் ஓவர் புகழ் பிராட்லி கூப்பர் - ரூ. 408 கோடி, ஹாலிவுட் நடிகர் ஆடம் சாண்ட்லர் - ரூ. 408 கோடி, கேப்டன் மேனாக நடித்த கிறிஸ் இவான்ஸ் - ரூ. 311 கோடி, பால் ரட் - ரூ. 293 கோடி, வில் ஸ்மித் - ரூ. 250 கோடி.