Advertisment

18 ஆண்டுகள் கழித்து காதலியை 2-வது திருமணம் செய்துகொண்டார்  ‘தி ராக்’...

wwe வீரராக அறிமுகமாகி, பின்னர் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்து தற்போது உலகம் முழுவதும் பிரபலாமாக இருக்கிறார் தி ராக் என்று அறியப்படும் டுவைன் ஜான்சன். இவர் தனது 12 வருட காதலியை திருமணம் செய்துள்ளார்.

Advertisment

the rock

ராக் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு வெளியான ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் ஸ்கார்பியன் கிங் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருப்பார். அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து . 2002ஆம் ஆண்டிலேயே ஸ்கார்பியன் கிங் என்ற படத்தில் ராக் ஹீரோவாக அறிமுகமாகினார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து வரிசையாக படங்களில் நடிக்க தொடங்கினார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹாப்ஸ் அண்ட் ஷா’ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 12 ஆண்டுகளாக காதலித்து வந்த லாரன் ஹாஷியன் என்பவரை கடந்த 18ஆம் தேதி ஹவாய் தீவில் திருமணம் செய்துள்ளார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவருக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

ட்வேய்ன் ஜான்சன் தனது முதல் மனைவியான டேனி கார்சியாவை கடந்து 2007ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு 18 வயதில் சிமோன் என்ற மகளும் உள்ளார். அதன் பிறகு லாரன் ஹாஷியனுடன் வாழ்ந்து வரும் ஜான்சனுக்கு ஜாஸ்மின், டியானா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

hollywood dwayne jhonson
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe