"அதே தெம்புல தொடர்வேன்" - துஷாரா விஜயன் நம்பிக்கை

dushara vijayan press meet

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 21 ஆம் தேதி வெளியான படம் 'அநீதி'.இப்படத்தை இயக்குநர் வசந்தபாலனின் 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது துஷாரா விஜயன் பேசுகையில், "எனக்கு எல்லா படமுமே முதல் படம் மாதிரி தான். தைரியமான கேரக்டரிலே நடித்து வருகிறேன் என நிறைய பேர் சொல்றாங்க. எனக்கு எல்லா பாத்திரங்களிலும் வித்தியாசமான கேரக்டரிலும் நடிக்க வேண்டும். அது போலத்தான் வசந்த பாலன் சார் இந்த கேரக்டர் கொடுத்தார். இனிமே நடிக்க போகிற படங்களில் வேற வேற கதாபாத்திரம்தான். மக்களுக்கு என் கதாபாத்திரங்கள் பிடிக்கும் என நம்புகிறேன். அதே போலத்தான் நடந்திருக்கு. ரொம்ப பயந்து பயந்து, வெகுளித்தனமாக இப்படத்தில் நடித்துள்ளேன்.

திண்டுக்கல்லில் இருந்து ஒரு பொண்ணு வந்ததை மக்கள் ஏத்துக்கிட்டது சந்தோசம். என் ஊரில் இருந்து என்னைப் பார்த்து 10 பேர் வந்தால் சந்தோசம்தான். ரொம்ப ஆசைப் பட்டு இந்த இடத்துக்கு வந்தேன். அது எல்லாத்துக்கும் பிடிக்குது என்பது, ஒரு தெம்பு கொடுக்குது. அந்த தெம்பில் தொடர்ந்து நடிப்பேன்" என்றார்.

Actress Dushara Vijayan
இதையும் படியுங்கள்
Subscribe