Advertisment

 “என்னுடைய உழைப்பு பலனளித்துள்ளது” - ரஜினி குறித்து துஷாரா விஜயன் நெகிழ்ச்சி

dushara vijayan about rajini

Advertisment

ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நேற்று(10.10.2024) வெளியான படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கல்வி மற்று போலீஸ் என்கவுன்டர் குறித்துப் பேசியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ரஜினியுடன் நடித்தது குறித்து துஷாரா விஜயன் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எனக்கு நடக்கும் என்று நான் கற்பனை செய்த சில விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என கனவில் கூட நினைத்ததில்லை. என்னுடைய முதல் நாள் முதல் ஷாட் தலைவருடன்தான். அவருடைய கேரவனுக்கு பக்கத்தில் எனது பெயரில் ஒரு கேரவன். அவருக்கு பக்கத்தில் நான் உட்கார்ந்திருந்தது, அவருடன் ஒரே ஃபிரேமில் நடித்தது, அவருடைய ஆற்றல், எனர்ஜி எல்லாமே மேஜிக்காக இருந்தது.

ரஜினியின் ரசிகனாக எனது ஆரம்பக்கால நினைவுகள், பள்ளியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து தலைவரின் படத்தை பார்ப்பதுதான். அதில் இருந்து இப்போது அவருடைய படத்தில் நான் நடித்தது வரை உண்மையிலே அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். என்னுடைய உழைப்பு, பொறுமை எல்லாம் பலனளித்துள்ளதாக உணர்கிறேன். ஒரே சூப்பர் ஸ்டார், ஒரே தலைவர், சான்சே இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Actress Dushara Vijayan Vettaiyan Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe