"இது குரலற்றவர்களின் குரல்" - துரை வைகோவை நெகிழவைத்த சீனு ராமசாமி

Durai Vaiko written letter to Seenu Ramasamy about Idam Porul Eval film

இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான, எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை ஒரு திரைக்காவியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா, கிராமியம் மணக்க மணக்க, இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த பிரபலங்கள் பலரும் மனமுவந்து படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

Durai Vaiko written letter to Seenu Ramasamy about Idam Porul Eval film

அந்த வகையில் ம.தி.மு.க. தலமைக்கழகச் செயலாளரான துரை.வைகோ, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் சீனு ராமசாமிக்கு மனமுருக ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில்... “திரைப்பட இயக்குநர் நண்பர் திரு. சீனு ராமசாமி அவர்கள் அழைப்பின் பேரில் இன்று ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைக் கண்டேன். கவிப்பேரரசு வைரமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் திரு கே. பாலகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Durai Vaiko written letter to Seenu Ramasamy about Idam Porul Eval film

விஜய் சேதுபதி நடித்துள்ள இத்திரைப்படத்தை லிங்குசாமி அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயற்கை வளங்களையும் மற்றும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ஆங்காங்கே இப்படம் சுட்டிக்காட்டுகிறது. கல்லுக்குள் ஈரம் உண்டு என்று சொல்வார்கள், கல்நெஞ்சமும் கரையும் என்று சொல்வார்கள், கொலை செய்யும் கொலைகாரனுக்கும் ஒரு இதயம் உண்டு என்று சொல்கிறது இந்த படம்.

ஏழை எளியோர் குரலற்றவர்களின் வாழ்க்கையை வஞ்சிக்கும் உலகத்தையும் அந்த எளியோர்கள் படும் துயரத்தையும் இந்த படம் எடுத்து காட்டுகின்றது. அன்பு மனங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு படைப்பு. நண்பர் சீனு ராமசாமி அவர்களின் மற்றுமொரு அருமையான படைப்பு.” என்று பாராட்டியிருக்கிறார்.

- இலக்கியன்

durai vaiko seenu ramasamy Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe