durai speech at thalainagaram 2 audio launch

கடந்த 2006ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தலைநகரம் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர் துரை இயக்கியுள்ள இப்படத்தில் பாலக் லால்வானி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

இதில் இயக்குநர் துரைபேசுகையில் படத்தைப் பற்றி பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்தார். மேலும், "என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சார். அவர் இப்போது மறைந்துவிட்டார்" எனப் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென எமோஷனலாகி கண்கலங்கிவிட்டார். பின்பு சமாதானமாகி அவருக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரையும் எழுந்து நிற்ககேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அனைவரும்எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து பேசிய அவர், "சக்கரவர்த்தி சார் எனக்கு மட்டும் முகவரி கொடுக்கவில்லை. அஜித்துக்கும் தான். அஜித் இந்தளவுக்கு உயர்ந்த இடத்தில்இருக்கிறார் என்றால் சக்கரவர்த்தி சார் ஒரு மிகப்பெரிய காரணம். அஜித்தை வைத்து பல படங்களைத்தயாரித்துள்ளார். அதற்கு சினிமா மீது சக்கரவர்த்தி சார் வைத்திருந்த காதல் தான் காரணம்" என்றார்.

Advertisment

எஸ்.எஸ்.சக்கரவர்த்திஅஜித்தை வைத்து ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய படங்களைத்தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.