கன்னட திரையுலகில் ஜூனியர் ஆட்டிஸ்ட்டாக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கி தற்போது மிகப்பெரிய கன்னட நட்சத்திரமாக இருப்பவர் நடிகரி விஜய்குமார். துனியா என்னும் படத்தின் மூலம் பிரபலமடைந்ததால் துனியா விஜய் என்று அழைக்கப்படுகிறார்.

Advertisment

duniya vijay

இவர் கடந்த 19ஆம் தேதி அவருடைய 46வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் கிரிநகரிலுள்ள தனது வீட்டின் முன்பு கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. அதில் துனியா விஜய் கேக்கை வெட்ட நீண்ட வாள் ஒன்றை பயன்படுத்தினார்.

மேலும் இந்த பிறந்தநாள் கொண்டாட்த்திற்காக அனுமதி பெறாமல் அப்பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு ரசிகர்கள் கூடியிருந்தார்கள். இதனால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக துனியா விஜய் மீது போலீஸ் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்தவிவகாரத்தில் பிறந்தநாள் கேக்கை வெட்ட ஏன் வாளை பயன்படுத்தினீர்கள் என்று விளக்கம் கேட்டு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதையடுத்து அவர் கிரிநகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி துனியா விஜய் விளக்கமளித்திருந்தார்.இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், வாளை பயன்படுத்தி கேக் வெட்டிய விவகாரத்திலும் அவர் மீது கிரிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.