dq

துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த நேரடி தெலுங்கு படத்தின் கான்செப்ட் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் வழங்க, ஸ்வப்னா சினிமாஸ்தயாரிக்கின்றனர். பெரும் வெற்றிபெற்ற நடிகையர் திலகம்/மஹாநடி படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

வரிசையாக பல படங்களை தயாரித்துவரும் இந்நிறுவனத்தின் அடுத்த படத்தில், துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். "ராணுவ வீரன் ராம்- போரூற்றி எழுதிய காதல் கதை" என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அவரது சமீபத்திய திரைப்படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகளிலும்தயாராகும் இந்த புதிய படத்தை, ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார். 1964ஆம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக இப்படம் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார். வைஜெயந்தி மூவீஸ் வழங்கும் இப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் சார்பாக பிரியங்கா தத், ஸ்வப்னா தயாரிக்கிறார்கள்.