/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_47.jpg)
துல்கர் சல்மான் நடிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணால் தாக்கூர் நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு ராணுவ வீரருக்கும் இளவரசிக்கும் இடையேயான காதலை அழகாக சொல்லியிருக்கும் இப்படத்திற்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் 'சீதா ராமம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 9-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனை அமேசான் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளனர். தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழ் மற்றும் மலையாளத்தில் டப் செய்து வெளியான இப்படம் சில தினங்களுக்கு முன்பு இந்தியிலும் டப் செய்யப்பட்டு திரையரங்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)