/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitledgegg.jpg)
பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான பால்கி இயக்கத்தில் கடைசியாக வெளியான 'பேட் மேன்' படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்திற்குப் பிறகு தன் அடுத்த படத்துக்கான கதையை பால்கி தயார் செய்து வைத்திருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தலால் படம் தள்ளிக்கொண்டே போனது. இந்த சூழலில் பால்கி அடுத்த படம் குறித்த தகவலைச் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். அதில்....
"பால்கியுடனான எனது அடுத்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இது ஒரு உளவியல் த்ரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தின் வேலையை விரைவில் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" எனக் கூறியுள்ளார். தற்போது நிலவி வரும் கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)