dulquer salman

அனூப்சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து கடந்தபிப்ரவரி மாதம் வெளியான மலையாள படம்'வரனேஅவஷயமுண்டு'. இந்த படம் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்கப்பட்டது. இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Advertisment

இப்படம் அண்மையில் ஓடிடிஃபிளாட்பார்மில் வெளியானது. அப்போது பத்திரிகையாளர் ஒருவரின் படத்தை தவறுதலாக தகுந்த அனுமதியின்றி வைத்ததால் பெரும் சர்ச்சையானது. பிறகு அவரிடம்மன்னிப்புக் கேட்டார்துல்கர் சல்மான். இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை உருவெடுத்துள்ளது.

Advertisment

அந்த படத்தில்சுரேஷ் கோபி வளர்க்கும் நாயின் பெயர் பிரபாகரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த காமெடிகாட்சிதமிழ் பயனர்களின் மனதைகாயப்படுத்தியதால் இணையத்தில் 'வரனேஅவஷ்யமுண்டு' படக்குழுவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு துல்கர் சல்மான்மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனைதொடர்ந்து துல்கர்சல்மான்இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் வரும் பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அது உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டதல்ல. பழைய மலையாளப் படமான 'பட்டண பிரவேஷம்' படத்தில் வரும் நகைச்சுவை அது. கேரளாவில் அது பொதுவான ஒரு பெயர். எனவே, படத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் யாரையும் குறிப்பிடுவது அல்ல.

Advertisment

இதற்கு எதிர்வினையாற்றும் பலரும் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையே என்னுடைய இயக்கர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக் கொள்ளலாம். எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.

இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும் காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல்.

பின் குறிப்பு : உங்களில் சிலர் எங்களோடு சேர்த்து எங்கள் குடும்பத்தையும் வன்மத்துடன் திட்டி, மிரட்டி, அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.