தமிழ், மலையாள, தெலுங்கு என மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வரும் துல்கர் சல்மான், தமிழில் கடைசியாக ஹே சினாமிகா படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் சீதா ராமம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடித்த கல்கி 2898 ஏ.டி. படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியான கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இவர் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படம் கடந்த தீபாவளின்று(31.11.2024) தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருந்த இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடித்திருக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தற்போது படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பி நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தெரிவித்து ஒரு புதிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வெளியான அதே நாளில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து தற்போது ரூ.250 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.