"அதுவே பெரிய விஷயம்" - ரஜினிகாந்த் குறித்து துல்கர் சல்மான்

dulquer salman about rajinikanth

துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கிங் ஆஃப் கோதா’. இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து துல்கர் சல்மான் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. .

அந்த வகையில் சென்னையில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் துல்கர் சல்மான். அதில் ரஜினி குறித்து பேசிய அவர், "நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் வசூலில் சாதித்து வருகிறது. எல்லாருக்கும் தெரியும் அவர் தான் உண்மையான கிங். அவர் படத்திற்கு நிறைய மக்கள் வந்து பார்க்கிறார்கள். அதில் 1 சதவீதம் நம்ம படத்துக்கு வந்தால் அதுவே பெரிய விஷயம்" என்றார்.

Actor Rajinikanth dulquer salman
இதையும் படியுங்கள்
Subscribe