Advertisment

‘என்ஜாய் எஞ்சாமி...’ பாடலை பாராட்டிய துல்கர் சல்மான்!

v dzvdz

சந்தோஷ் நாராயணன் மகளும் இளம்பாடகியுமான தீ மற்றும் ‘தெருக்குரல்’ அறிவு குரலில் உருவாகியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி...’ பாடல் கடந்த 7ஆம் தேதி வெளியானது. இதுவரை 30 மில்லியன் பார்வையாளர்களால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ள இப்பாடலை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் உருவான இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Advertisment

மேலும், திரை பிரபலங்கள் பலரும் இப்பாடலை தற்போது பாராட்டி வருகின்ற நிலையில், நடிகர் துல்கர் சல்மான் இப்பாடல் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "கடந்த சில நாட்களாக இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் தற்போதும் கூட பாடலில் இருந்து புதுவிதமான ஒலிகளை உணர்கிறேன். ஹேட்ஸ் ஆஃப் சார், பாடகி தீயின் குரலும் ஸ்டைலும் மிக நன்றாக இருக்கிறது. ‘தெருக்குரல்’ அறிவு ஒரு ராக் ஸ்டார்” எனக் கூறியுள்ளார்.

Advertisment

dulquer salman enjoy enjaami
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe